'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜுனியர் என்.டி.ஆரின் நன்னுக்கு பிரேமதோ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டோலிவுட்டில் களமிறங்கவிருக்கும் திரைப்படங்களில் ஒன்று. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் நன்னுக்கு பிரேமதோ படத்தில் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடிக்கின்றார். ஸ்பெயினில் இறுதி கட்ட படப்பிடிப்பில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெறவுள்ள துள்ளல் இசை பாடலொன்றை ஜுனியர் என்.டி.ஆர் பாட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ரபாசா, கன்ற்றி போன்ற படங்களில் ஏற்கனவே ஜுனியர் என்.டி.ஆர் பாடிய பாடல்கள் மிகவும் பிரபலமானவை. அதே போல் நன்னுக்கு பிரேமதோ படத்திலும் ஜுனியர் என்.டி.ஆர் பாடவுள்ளாராம். படக்குழு ஸ்பெயின் படப்பிடிப்பை முடித்து ஐதராபாத் திரும்பியதும் இப்பாடலுக்கான பதிவு நடைபெறும் என கூறப்படுகின்றது. அக்டோபரில் வெளியான இப்படத்தின் ஸ்டெயிலிஷான டீசரக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். தற்போதைய தகவலின் படி ஜுனியர் என்.டி.ஆர் இப்படத்தில் பாடல் பாடினால் இன்னும் கூடுதல் சிறப்பாக ரசிகர்கள் மத்தியில் இப்படம் வரவேற்பு பெறும் என்பதில் ஐயமில்லை.