தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இயக்குனர் எஸ்.ஜெ சூர்யா இயக்கத்தில் நடிகர் விஜய் நடிகை ஜோதிகா நடிப்பில் வெளிவந்த குஷி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து விஜய்யின் திரை உலக வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. அப்படம் தெலுங்கில் நடிகர் பவன் கல்யாண் மற்றும் நடிகை பூமிகா நடிப்பில் குஷி என்ற பெயரிலேயே வெளிவந்து அங்கும் வெற்றி பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் எஸ்.ஜெ.சூர்யா தயார் செய்து விட்டதாகவும் நடிகர் விஜய்யின் 60வது படமாக இப்படத்தை இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
குஷி 2 படத்தை தெலுங்கிலும் இயக்க எஸ்.ஜெ.சூர்யா திட்டமிட்டுள்ளாராம். இதற்காக பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாணிடம் எஸ்.ஜெ.சூர்யா பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றார். பவன் கல்யாண் தற்போது சர்தார் கபார் சிங் படத்தில் நடித்து வருகின்றார். பவன் கல்யாண் சம்மதம் தெரிவித்தால் சர்தார் படத்திற்கு பின்னர் குஷி 2 படத்தில் அவர் நடிக்கக் கூடும் என கூறப்படுகின்றது. நடிகை நயன்தாராவை பவன் கல்யாணுக்கு ஜோடியாக்கவும் எஸ்.ஜெ.சூர்யா முயற்சி செய்து வருகின்றாராம்.