மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் |
சோஷியல் மீடியாவால் என்னென்ன நன்மைகள் இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு மனிதர்களை சங்கடப்படுத்தும் நிகழ்வுகளுக்கும் குறைவு இல்லை. உயிரோடு இருக்கும் ஒருவர் இறந்துவிட்டார் என யாரோ ஒரு வேண்டாதவர் ஸ்டேட்டஸ் போட்டால், என்ன எது என்று கூட அதை விசாரிக்காமல், ஆர்வக்கோளாறில் நிமிடத்தில் லட்சக்கணக்கானவர்களுக்கு அதை பரப்பிவிடும் குணம் சோஷியல் மீடியாவில் பலருக்கும் இருக்கிறது.. இதை உண்மை என நம்பி சில மீடியாக்களும் விசாரிக்காமல் தவறான தகவல்களை மக்களுக்கு சொல்ல ஆரம்பித்துவிடுகின்றன.
இந்தமுறை இந்த வதந்தி மரணத்தில் மாட்டிகொண்டவர் மலையாள காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரான மாமுகோயா.. 69 வயதான இவரைத்தான் இறந்துவிட்டதாக வாட்ஸ் அப்பில் யாரோ ஒருவர் தவறான தகவலை பரவவிட, உடனே பலரும் மாமுகோயாவின் வீட்டிற்கு போன் செய்து விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்களாம். சிலர் நேரிலேயே வந்துவிட்டார்களாம். அவர்களாவது பரவாயில்லை.. ஆனால் இதை தீர விசாரிக்காமல் சோஷியல் மீடியாவில் பலரும் இதை பரப்பியிருகின்றனர். சில சேனல்களில் இரங்கல் செய்தி ஸ்க்ரோலிங்கில் ஓட ஆரம்பித்துவிட்டதாம்.
மாமுகோயாவுக்கும் இந்த தகவல் கவனத்துக்கு வந்தது. ஆனால் இதுபற்றி கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாத அவர் தனக்கே உரிய டைமிங் சென்ஸ் பாணியில் காமெடியாக “நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்.. அப்படி நான் இறந்துபோனால் அதை நானே உங்களுக்கு அப்டேட் செய்கிறேன்” என சோஷியல் மீடியாவில் பதிலுக்கு போட்டுத்தாக்கியுள்ளார். முன்பு நம் தமிழகத்திலும் கவுண்டமணி, மனோரமா, கனகா என சில நடிகர்களுக்கு இதுபோன்ற அபத்தமான வதந்தி மரணம் ஏற்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.