ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
டோலிவுட்டின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா - அமலா தம்பதியரின் மகன் அகிலை நாயகனாக வெள்ளித் திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். விவி விநாயக் இயக்கக்கியுள்ள இப்படம் அக்டோபர் 22 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அகிலுக்கு ஜோடியாக சேஷா சைகள் நடித்துள்ள இப்படம் தெலுங்கு மற்றும் தமிழில் வெளிவரவுள்ளது. தெலுங்கில் அகில் : தி பவர் ஆப் ஜுவா என்ற பெயரில் வெளிவரும் இப்படத்திற்கு தமிழில் சூர்ய கவசம் என பெயரிடப்பட்டுள்ளது. தற்சமயம் இப்படத்தின் தமிழ் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.விரைவில் இப்படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. நடிகர் நாகார்ஜுனா,நடிகர் நாக சைதன்யா, நடிகர் அகில் பங்கேற்ற பாடல் காட்சி அண்மையில் படமாக்கப்பட்டது. அக்டோபர் 16 ஆம் தேதி இப்படத்தை தணிக்கை அணுப்ப படக்குழு திட்டமிட்டுள்ளது. நடிகர் நிதின் அவரது தந்தை சுதாகர் ரெட்டியுடன் இணைந்து பெரும் பொருட் செலவில் இப்படத்தை தயாரித்து வருகின்றார்.