Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

அட்டாக் படத்தின் டிரைலர் வெளியீடு விழா விபரம்!

08 அக், 2015 - 16:55 IST
எழுத்தின் அளவு:
Attack-Audio-launch-details

தெலுங்கு நடிகர் மஞ்சு மனோஜ் அதிரடி நாயகனாக நடித்துள்ள அட்டாக் படத்தை டோலிவுட்டின் சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கியுள்ளார். இவன் வேற மாதிரி படத்தில் நடித்த சுரபி இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீடு ஹைதராபாத்தில் உள்ள பிரசாத் லாபில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் மஞ்சு மனோஜ், இயக்குனர் ராம் கோபால் வர்மா, தயாரிப்பாளர் சி.கல்யாண் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.


விழாவின் போது இயக்குனர் ராம் கோபால் வர்மா கூறுகையில், அண்மையில் வெளியான எனது படங்களைப் பார்த்த பலர் எனக்கு மனநலம் பாதிக்கப்படுள்ளதாகக் கூறுகின்றனர். சிவா படத்தை இயக்கிய ராம் கோபால் வர்மாவா இது போன்ற படங்களை இயக்குவது எனவும் கேட்கின்றனர். வழக்கமான திரைக்கதையிலிருந்து மாறி மாறுபட்ட திரைக்கதை கொண்ட படங்களை இயக்கி ஆய்வு மேற்கொண்டதாக ராம் கோபால் வர்மா கூறினார். மேலும் ரசிகர்களின் ரசனைக்கேற்ப ஒரு படம் இயக்க வேண்டும் என கல்யாண் கேட்டுக் கொண்டதற்கிணங்க இப்படத்தை இயக்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.ராம் கோபால் வர்மா இப்படத்தைத் தொடர்ந்து கில்லிங் வீரப்பன் என்ற படத்தை தெலுங்கு மற்றும் கன்னடத்தில் இயக்கி வருகின்றார்.


நடிகர் மஞ்சு மனோஜ் கூறுகையில், சிவா,ரங்கீலா போன்ற படங்களை இயக்கிய ராம் கோபால் வர்மாவின் ரசிகன் நான். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என விரும்பினேன். ராம் கோபால் வர்மா அட்டாக் படத்தின் கதையை என்னிடம் கூறியபோது நான் வியந்து விட்டேன். இப்படம் கண்டிப்பாக ரசிகர்களுக்குப் பிடிக்கும் என மஞ்சு மனோஜ் நம்பிக்கை தெரிவித்தார்.


இப்படத்தின் தயாரிப்பாளர் சி.கல்யாண் பேசுகையில், ராம் கோபால் வர்மா ஆய்விற்காக படங்களை இயக்குவதைப் பார்த்து அவரது கடின உழைப்பு வீணாவதாக அவரிடம் தினமும் சண்டை போடுவேன். ராம் கோபால் இப்படத்தை இயக்க வேண்டும் என நானே வலியுறுத்தினேன். இப்படம் வெளிவந்த பின்னர் டோலிவுட்டில் இப்படத்தைப் பற்றியே அனைவரும் பேசுவார்கள். இக்கதைக்கு ஏற்ற நடிகர் மஞ்சு மனோஜ் தான். இப்படத்தின் முதல் பிரதியைப் பார்த்த போது சில இடங்களில் திருத்தம் தேவைப்பட்டது. அதனால் மீண்டும் சில காட்சிகளை திரும்ப எடுத்தோம். அஞ்ஜியின் ஒளிப்பதிவு கண்டிப்பாக பேசப்படும். ராம் கோபால் வர்மா இப்படத்தின் வாயிலாக தனது பழைய வெற்றிப் பாதைக்கு திரும்ப நான் விரும்புகிறேன். இப்படத்தின் பாடல்கள் அடுத்த வாரம் வெளியிடப்படும். இப்படத்தை நவம்பர் மாதம் திரையிட திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in