தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கேரள விஜய் ரசிகர்களும் சரி, பொதுவான ஆடியன்ஸும் சரி.. இந்த அதிர்ச்சியை எதிர்பார்க்கவே இல்லை.. நேற்று முன் தினம் அவர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த புலி வழக்கம்போல வெகு விமரிசையாக கேரளாவில் நிறைய தியேட்டர்களில் வெளியானது.. இதன் காரணமாகவே எப்போதும் போல விஜய்யுடன் மோத விரும்பாமல் 'சைகல் பாடுகயானு' என்கிற ஒரே ஒரு மலையாளப்படம் தவிர வேறெந்த மலையாள படமும் கேரளாவில் வெளியாகவில்லை... ஆனால் அந்தோ பரிதாபம், புலி படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறிவிட்டது..
அதனால் நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. பல இடங்களில் புலி பட காட்சிகளின் எண்ணிக்கையை அப்படியே குறைத்துவிட்டு, அதற்கு பதிலாக ஏற்கனவே ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டு இருக்கும் பிருத்விராஜின் 'என்னு நிண்டே மொய்தீன்' படத்தின் காட்சிகளை இன்னும் அதிகரித்துவிட்டார்கள். இத்தனைக்கும் இந்தப்படம் வெளியாகி இரண்டு வாரம் கடந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் 'பிரேமம்' படம் வெளியானபோது, அதன்பின் சில நாட்கள் கழித்து வெளியான சூர்யாவின் 'மாஸ்' படத்துக்கும் இதே கதிதான் நேர்ந்தது.. அவ்வளவு ஏன், இரண்டு வருடங்களுக்கு முன் டிசம்பர் இறுதியில் வெளியான 'திரிஷ்யம்' முன் ஜனவரியில் பொங்கலுக்கு வெளியான ஜில்லா படம் தாக்குப்பிடிக்க முடியாமல் ஒதுங்கியதும் இங்கே நினைவுகூறத்தக்கது.