ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சசி இயக்கத்தில் வெளியான '555' படத்தில் பரத்தின் ஜோடியாக அறிமுகமாகி அந்தப்படத்தில், சிலேட்டு குச்சியை தின்னும் வினோத பழக்கத்தால் நம்மை ஆச்சர்யப்படுத்தியவர் மிருத்திகா. தமிழுக்குத்தான் இவர் மிருத்திகா.. ஆனால் இவரது ஒரிஜினல் பெயர் சாந்தினி.. மலையாளத்தில் இந்தப்பெயருடன் தான் உலா வருகிறார். இந்த வருட ஆரம்பத்தில் இளம் நடிகரான உன்னி முகுந்தனுக்கு ஜோடியாக மலையாளத்தில் 'கே.எல்-1௦' என்கிற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.. தொடர்ந்து இப்போது எதிர்பாராத விதமாக பிருத்விராஜுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார் சாந்தினி.
படத்தின் பெயர் 'டார்விண்டே பரிணாமம்'. படத்தை இயக்குபவர் ஜிஜோ ஆண்டனி.. ஏற்கனவே குஞ்சாக்கோ போபனை வைத்து 'கொந்தாயும் பூணூலும்' என்கிற படத்தை இவர் இயக்கியுள்ளார். பிருத்விராஜ்-ஆர்யா கூட்டணியின் 'ஆகஸ்ட் சினிமாஸ்' தயாரிப்பு நிறுவனம் தான் இந்தப்படத்தை தயாரிக்கிறது.. கடந்த வருடம் வெளியான 'சப்தமஸ்ரீ தஸ்கரா' படத்திற்கு பின் பிருத்விராஜ் நடித்த காமெடிப்படம் எதுவும் வெளியாகவில்லை என்கிற குறையை இந்தப்படம் போக்கிவிடும் என்கிறார்கள்.