‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர் நிதின் தனது தந்தையுடன் இணைந்து பிற படங்களை தயாரித்தும் வருகின்றார். அகில் படத்தை தயாரித்து வரும் நிதின் நடிப்பில் கொரியர் பாய் கல்யான் படம் அண்மையில் திரைக்கு வந்தது. இப்படத்திற்கு பின்னர் நிதின் இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். தயாரிப்பாளர் ராதா கிருஷ்ணா ஹரிக்கா அன்ட் ஹாசினி கிரியேசன்ஸ் சார்பில் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் துவங்கவுள்ளன. இப்படத்தில் பிரபல இயக்குனர் ஸ்ரீநிவாஸ் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கதையாசிரியர், வசனகர்தா, இயக்குனர், நடிகர் என பன்முகம் கொண்ட ஸ்ரீநிவாஸ் அவசரலா நிதின் நடிக்கும் அடுத்த படத்தில் நடிக்கின்றார். இயக்குனர் கிரிஷ் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் கஞ்சே படத்தில் ஸ்ரீநிவாஸ் அவசரலா நடித்துள்ளார். அப்படத்தை ஸ்ரீநிவாஸ் அவசரலா ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்துள்ளாராம். நிதின் நடிப்பில் இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கவிருக்கும் படத்திற்கு பிரபல இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார்.