Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

நடிகர் பாலாவின் முன்னாள் மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் இசையமைப்பாளர்

28 மே, 2022 - 13:58 IST
எழுத்தின் அளவு:
Music-director-so-close-with-Amrutha-suresh

மலையாள திரையுலகில் பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் கோபி சுந்தர். தமிழில் தோழா, பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது கோபி சுந்தர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு புகைப்படம் மலையாள திரையுலகில் பரபரப்பையும் ரசிகர்களிடம் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கோபி சுந்தர் பின்னணி பாடகி அம்ரிதா சுரேஷுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் தான் அது.

இந்த அம்ரிதா சுரேஷ், இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியும் வீரம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகருமான பாலாவின் முன்னாள் மனைவி ஆவார். 2010ல் ஒரு ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்ட அவருக்கும், நடுவராக கலந்துகொண்ட பாலாவுக்கும் காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து அந்த இருவருக்கும் கடந்த வருடம் தான் விவாகரத்து ஆனது.

அதேபோல ஏற்கனவே பிரியா என்பவருடன் திருமணம் ஆன கோபி சுந்தர் 2010ல் அவரிடமிருந்து பிரிந்து விவாகரத்துக்கு விண்ணப்பித்து விட்டு அதன்பிறகு கடந்த எட்டு வருடங்களாக பின்னணி பாடகியான அபயா ஹிரன்மயி என்பவருடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப் முறையில் வாழ்க்கை நடத்தி வந்தார். இந்த நிலையில்தான் தற்போது அம்ரிதா சுரேஷுடன் மிக நெருக்கமாக அவர் எடுத்துக் கொண்டிருக்கும் புகைப்படமும் அதுகுறித்து அவர் கூறியுள்ள வார்த்தைகளும் இவர்களுக்குள் புதிய உறவு மலர்ந்துள்ளது என்பதை சொல்லாமல் சொல்கிறது. கோபி சுந்தருக்கு நெருக்கமான சில நண்பர்கள் இந்த புதிய உறவை வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
இசையமைப்பாளருக்கு கேரள அரசு விருது : குஷி படக்குழு மகிழ்ச்சிஇசையமைப்பாளருக்கு கேரள அரசு விருது : ... 2021 கேரள அரசு விருதுகள் அறிவிப்பு : சிறந்த நடிகர் பிஜூமேனன், சிறந்த நடிகை ரேவதி 2021 கேரள அரசு விருதுகள் அறிவிப்பு : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Sivagiri - chennai,இந்தியா
29 மே, 2022 - 12:46 Report Abuse
Sivagiri இதெல்லாம் தரமான நியூஸ் பேப்பர்ல வர வேண்டிய நியூஸ் கிடையாது . . .
Rate this:
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
29 மே, 2022 - 05:05 Report Abuse
N Annamalai டிவி சீரியல் கதை தயார் .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in