தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து |
பாகுபலி படங்களின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ராஜமவுலி இயக்கவுள்ள படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். சமீபத்தில் பூஜையுடன் துவங்கப்பட்ட இந்தப்படத்தின், ஹிந்தி ரைட்ஸை கைப்பற்றும் முயற்சியில் இப்போதே களம் இறங்கிவிட்டார் பாலிவுட் தயாரிப்பாளரும், இயக்குனருமான கரண் ஜோஹர்.
இதற்கு முன் பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் ஹிந்தியில் தனது தர்மா புரொடக்சன்ஸ் மூலமாக வெளியிட்டு மிகப்பெரிய அளவில் படத்தை வெற்றி பெற செய்ததுடன், நல்ல லாபத்தையும் அள்ளினார். அதனால் தான் இந்தமுறை பட பூஜை போடப்பட்ட போதே ஹிந்தி உரிமத்தை கைப்பற்ற பேச்சுவார்த்தையை துவக்கிவிட்டாராம் கரண் ஜோஹர்.