இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அமிதாப்பச்சன், அமீர்கான், காத்ரினா கைப் என பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படம் என கடந்த வாரம் ஹிந்தித் திரையுலகத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்திய படம் 'தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்'. இப்படத்தின் டிரைலருக்கு 9 கோடிக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்ததால் படம் பெரிய வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், முதல் நாள் முதல் காட்சியிலேயே படத்தின் ரிசல்ட் என்ன என்பது தெரிந்துவிட்டது.
படம் வெளியான முதல் நாளில் 50 கோடி வசூலித்த இந்தப் படம், அடுத்த நாளே 28 கோடிக்கு கீழிறிங்கியது. சனிக்கிழமை 22 கோடி, ஞாயிறு 17 கோடி, திங்கள் 7 கோடி என வசூல் படிப்படியாகக் குறைந்தது பாலிவுட் எதிர்பார்க்காதது. 5000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிட்டு இவ்வளவு தான் வசூலித்துள்ளது என்றால் மிகவும் ஆச்சரியம்தான்.
சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படமான இந்தப் படம் அதில் பாதி அளவாவது வசூலிக்குமா என்பது சந்தேகம் என்கிறார்கள். ஆமிர்கான், அமிதாப்பச்சன் நடித்து வெளிவந்த மோசமான படங்களின் வரிசையில் இந்தப்படமும் இடம் பிடிக்கும் என்கிறார்கள்.
'பாகுபலி'யை வீழ்த்தும் அளவிற்கு ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என பாலிவுட்டில் நினைத்தார்கள். கடைசியில் அது பரிதாபம் ஆகிவிட்டது.