ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். அடிக்கடி பரபரப்பாக எதையாவது செய்து லைம் லைட்டில் இருப்பார். தேர்தலில் கூட போட்டியிட்டிருக்கிறார். சமீபத்தில் நடிகை தனுஸ்ரீ தத்தா, தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று கூட கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் மல்யுத்த வீராங்கனை ஒருவரிடம் வெட்டி சவால் விட்டவர், அவரிடம் அடிவாங்கி மருத்துவமனையில் இருக்கிறார். இதுபற்றிய விபரம் வருமாறு:
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள பஞ்சபுலா என்ற இடத்தில் பெண்கள் மல்யுத்த போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டிக்கு சிறப்பு அழைப்பாளராக ராக்கி சாவந்த் சென்றிருந்தார். முன் வரிசையில் அமர்ந்து போட்டியை ரசித்துக் கொண்டிருந்தார். போட்டியில் வெற்றி பெற்ற ரொபேல் என்ற வீராங்கனை "என்னுடன் மோத தைரியம் உள்ளவர்கள் இங்கே யாராவது இருக்கிறீர்களா?" என்றார். இப்படி கேட்பவது அவர்களின் வழக்கம்.
இதை சீரியசாக எடுத்துக் கொண்ட ராக்கி சாவந்த், இதை வைத்து ஒரு பரபரப்பு கிளப்பலாம் என்று மல்யுத்த வளையத்திற்குள் குதித்தார். "உன்னை எதிர்த்து நான் சண்டை போடுகிறேன். என்னைப் போன்று உன்னால் நடனமாட முடியுமா?" என்றார். அதற்கு ரொபேல் ஒத்துக் கொண்டு ராக்கியுடன் சேர்ந்து நடனம் ஆடினார். சவாலின்படி ராக்கி, ரொபேலுடன் மல்யுத்தத்திற்கு தயாரானார். ராக்கியை அலேக்காக தூக்கிய ரொபேல், ரிங்கை ஒரு ரவுண்டு வலம் வந்து அப்படியே தரையில் அடித்தார். சுருண்டு விழுந்தார் ராக்கி. விழா ஏற்பாட்டாளர்கள் அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அவருக்கு முதுகெலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இப்போது சிகிச்சை பெற்று வருகிறார் ராக்கி சாவந்த்.