‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பாலிவுட்டில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன் வெளியாகி ஒரு கலக்கு கலக்கிய படம் தான் 'குச் குச் ஹோதா ஹே'. ஷாருக்கான், சல்மான் கான், கஜோல், ராணி முகர்ஜி ஆகியோர் நடித்திருந்த இந்தப்படத்தை இயக்கி திரையுலகில் தனது முதல் அடியை எடுத்து வைத்தார் இயக்குனர் கரண் ஜோஹர்.
இந்தப்படம் வெளியாகி இருபது வருடம் நிறைவடைந்ததை முன்னிட்டு நேற்று அதை ஒரு விழாவாக கொண்டாடியுள்ளனர் இந்தப்படத்தில் பணியாற்றியவர்கள். இந்த நிகழ்வில் பேசிய இயக்குனர் கரண் ஜோஹர் இந்தப்படத்தின் படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.
இந்தப்படத்தில் நடிக்கும்போது ஷாருக்கானுக்கு திரையில் சிரிக்கவே தெரியாது என்றும், அதனால் அவரை சிரிக்க வைத்து காட்சிகளை படமாக்க பலமுறை ரீடேக்குகள் எடுக்கவேண்டி இருந்தது என்றும் கூறினார். அதனாலேயே ஷாருக்கானை வைத்து சிரிக்க வேண்டிய காட்சிகளை படமாக்கும்போது அருகில் இருந்து ஜோக்குகளை சொல்லி அவரை சிரிக்க வைத்து, அப்படி சிரிப்பதை படம் பிடித்து சமாளித்தோம் என கூறினார் கரண் ஜோஹர்.