அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் |
புதுடில்லி : புற்றுநோயில் இருந்து மீண்ட சினிமா நடிகை, லிசா ரே, இரட்டை பெண் குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார்.
வட அமெரிக்க நாடான கனடாவில் பிறந்த, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, லிசா ரே, 46, ஹிந்தி படங்களில் நடித்து, பிரபலமானார். விளம்பர மாடலாகவும் இருந்தார். தமிழில், நடிகர் சரத்குமாருடன், நேதாஜி என்ற படத்தில் நடித்திருந்தார். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, லிசா ரே, அதற்கான சிகிச்சை பெறும்போதே, 2012ல், ஜேசன் டெஹ்னி, 46, என்பவரை திருமணம் செய்தார்.
கடந்த ஜூனில், சூபி மற்றும் சோலெய்ல் என்ற இரட்டை பெண் குழந்தைகளுக்கு, லிசா ரே தாயானார். ரத்த புற்றுநோய்க்கு எதிரான தன் போராட்டம் மற்றும் வெற்றி குறித்து, சமூக வலைதளங்களில் லிசா ரே பகிர்ந்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: கடந்த, 2009ல் எனக்கு ரத்த புற்றுநோய் இருப்பது தெரிந்ததும், வாழ்நாள் முழுவதும் மருந்துகளுடன், குழந்தை பேறில்லாமல் வாழ வேண்டியிருக்கும் என நினைத்தேன். ஆனால், தொழில்நுட்ப முன்னேற்றத்தால், புற்றுநோய் குணமானதுடன், வாடகை தாய் மூலம், குழந்தைகளுக்கு தாயாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
புற்றுநோய்க்கு எதிரான என் பயணம், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, குழந்தை பேறுக்காக ஏங்குவோருக்கு நம்பிக்கை அளிக்கும் என, நம்புகிறேன். வாழ்க்கை, நமக்கு சவால்களையும், அற்புதங்களையும் வழங்குகிறது. என் செல்ல மகள்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.