இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அபிஷேக் பச்சனை திருமணம் செய்த பின், நடிப்பதை தவிர்த்து வந்த, ஐஸ்வர்யா, குழந்தை பிறந்ததும், மீண்டும் முழுவீச்சில் நடிக்க தயாரானார். ஆனால், அதற்கு பின், அவர் நடித்த படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. இதனால், படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். தற்போது, ஐஸ்வர்யா மகள், ஆரத்யாவுக்கு, 6 வயதாகி விட்டது.
'இனிமேலாவது, அதிக படங்களில் நடிப்பீர்களா' என, கேட்டால், பதில் கூறாமல், மவுனமாக புன்னகையை உதிர்க்கிறார், ஐஸ்வர்யா. இதனால், அவர், நடிப்புக்கு முழுக்கு போடப் போவதாக செய்தி வெளியானது.
தற்போது, அனில் கபூருடன் இணைந்து, பேனி கான் என்ற படத்தில் மட்டும் நடித்து வருகிறார். இது, பெல்ஜியம் நாட்டில் வெளியான, மிகப் பெரிய வெற்றி பெற்ற, எவ்ரிபடி பேமஸ் என்ற படத்தின், ரீமேக். இதில், பிரபலமான பாடகியாக நடிக்கிறாராம், ஐஸ்வர்யா. இந்த படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, அடுத்தடுத்த படங்களில் நடிக்க முடிவு செய்து உள்ளார், அவர்.