பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன். அவ்வப்போது பெண்கல்விக்கு, விசாயிகளுக்கு உதவுவார். அந்த வரிசையில் தற்போது போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பம், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு 2 கோடி நிதி உதவி வழங்க இருக்கிறார். இதை சத்தமின்றி செய்யவே அவர் விரும்பினார். ஆனால் தகவல் வெளியில் கசிந்து விடவே தனது டுவிட்டரில் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் உதவியுடன் ராணுவ வீரர்கள், மற்றும் விவசாயிகள் குடும்பம் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அந்த தொண்டு நிறுவனததின் மூலமே உதவிகளையும் வழங்க இருக்கிறார். இதற்கு தனி விழாவோ விளம்பரமா இருக்காது என்று கூறப்படுகிறது. அமிதாப்பச்சன் ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உதவுவதற்காக தனியாக ஒரு அறக்கட்டளை அமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.