'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா |
இந்தியத் திரையுலகின் சூப்பர் ஸ்டார்களான ஷாரூக் கான், சல்மான் கான் இருவரும் இணைந்து நடித்து பல வருடங்களாகிவிட்டன. “கரண் அர்ஜுன், குச் குச் ஹோத்தா ஹை, ஹம் தும்ஹாரே ஹைன் சனம்' ஆகிய படங்கள் அவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்களில் மறக்க முடியாத படங்கள்.
பல வருட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை. இருந்தாலும் ஷாரூக்கான் தற்போது நடித்து வரும் 'ஜீரோ' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் சல்மான் கான் நடித்துள்ளார். அந்த டீசர் நேற்று வெளியிடப்பட்டது.
ரம்ஜானை முன்னிட்டு சல்மான் கான் நடித்து இன்று வெளிவந்துள்ள 'ரேஸ் 3' படத்துடன் இந்த 'ஜீரோ' படத்தின் டீசரும் திரையிடப்படுகிறது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஷாரூக்கான் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது,
“சகோதரர் சல்மான் கான், ஜாவேத் ஜாப்ரி, ஆனந்த் எல்ராய், டெட் சில்லிஸ் விஎப்எக்ஸ் ஆகியோருக்கு மிகப் பெரிய நன்றி. 'ஜீரோ' என்ற கனவு நனவானது. இதயத்திலிருந்து...”.
'ஜீரோ' படத்தில் உயரம் குறைவான மனிதராக ஷாரூக் கான் நடிக்கிறார். இப்படத்தின் கதாநாயகிகளாக அனுஷ்கா ஷர்மா, காத்ரினா கைப் நடிக்கிறார்கள். இந்த வருடம் டிசம்பர் 21ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.