ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகை இலியானா ஆஸ்திரேலிய புகைப்பட கலைஞரான ஆண்ட்ரேவுடன் பல வருடங்களாக நட்பு வளர்த்து வருகிறார். இருவரும் டேட்டிங் செல்வதை வழக்கமாகக் கொண்டு வருகிறார்கள். அதோடு சினிமா விழாக்களிலும் ஜோடியாக கலந்து கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், அவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக சில மாதங்களாக செய்திகள் வெளியாகி வந்தன. கடந்த சில வாரங்களாக இலியானா கர்ப்பமாக இருப்பதாக பரபரப்பு செய்திகள் வெளியாகி வந்தன.
அதோடு தற்போது அஜய்தேவ்கனுடன் நடித்து வரும் படத்தில் இலியானாவின் தோற்றம் அவர் கர்ப்பமாக இருப்பதை வெளிப்படுத்துகிறது. அவரும், இறுக்கமான உடைகளை அணியாமல் தளர்ச்சியான உடைகளை அணிந்து நடித்து வருகிறார் என்றும் கூறப்பட்டது.
ஆனால் அதற்கு இலியானாவும், அவரது பாய் பிரண்ட் ஆண்ட்ரேவும் உடனடியாக எந்த பதிலும் கொடுக்காத நிலையில், தற்போது இணைய பக்கத்தில் இலியானா கர்ப்பமாக இல்லை என்றொரு செய்தியை பதிவிட்டுள்ளனர். இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக பாலிவுட்டில் கொளுந்து விட்டு எரிந்து வந்த இலியானா கர்ப்பம் என்கிற செய்தி தற்போது அணையத் தொடங்கியிருக்கிறது.