'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
தமிழ்த் திரையுலகத்தில் கடந்த வருடம் வெளிவந்து வரவேற்பையும், வசூலையும் பெற்ற படங்களில் முக்கியமான படம் 'விக்ரம் வேதா'. புஷ்கர், காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்த இந்தப் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளார்கள். படத்தில் யார், யார் நடிக்கப் போகிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை.
இதனிடையே, இப்படத்தில் ஷாரூக்கான் நடிக்கப் போகிறார் என்றும் செய்திகள் வெளியானது. ஆனால், அவர் இரண்டு கண்டிஷன்களைப் போடுகிறாராம். ஒன்று, மாதவன் தமிழில் நடித்த கதாபாத்திரத்தை ஹிந்தியிலும் ஏற்று நடிக்க வேண்டும். ஷாரூக், விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கத் தயாராக இருக்கிறாராம். இர்ண்டாவது, படத்தை ஹிந்தியில் தயாரிக்கவிருக்கும் நீரஜ் பாண்டே இயக்க வேண்டுமாம். இவை இரண்டிற்கும் தயாரிப்பாளர்கள் சம்மதித்தால் ஷாரூக் கான் நடிக்க சம்மதம் என்கிறாராம்.
ஆனால், தமிழில் படத்தை இயக்கிய புஷ்கர், காயத்ரி இருவரே ஹிந்தியில் இயக்குவார்கள் என்று முதலில் சொல்லப்பட்டது. ஷாரூக்கானுக்காக அவர்களை மாற்றுவார்களா என்பது அடுத்த கேள்வி ?. இருந்தாலும், ஷாரூக்கான் நடித்தால் படத்தின் வெற்றி வேறு லெவலில் இருக்கும் என்பதும் மறுக்க முடியாத உண்மை.