துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
2017ம் ஆண்டில் தமிழில் வெளிவந்த படங்களில் முக்கியமான வெற்றிப் படமாக அமைந்தது 'விக்ரம் வேதா'. புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் சாம்.சி.எஸ். இயக்கத்தில், மாதவன், விஜய் சேதுபதி, ஷ்ரதா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் மற்றும் பலர் நடித்த படம். இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரிலயன்ஸ் என்டர்டெயின்மென்ட், பிரைடே பிலிம் ஒர்க்ஸ், ஒய் நாட் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இந்தப் படத்தை இணைந்து தயாரிக்கின்றன. தமிழில் படத்தை இயக்கிய புஷ்கர் - காயத்ரி ஹிந்தியிலும் படத்தை இயக்க உள்ளார்கள். பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான நீரஜ் பாண்டே ஹிந்தியில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்ற உள்ளார்.
தமிழில் இப்படத்தைத் தயாரித்துள்ள ஒய் நாட் ஸ்டுடியோஸ் இதற்கு முன் ஹிந்தியில் 'இறுதிச் சுற்று, சுப் மங்கள் சாவ்தான்' ஆகிய படங்களை இணைந்து தயாரித்துள்ளது. தற்போது மூன்றாவதாக 'விக்ரம் வேதா' ஹிந்தி ரீமேக்கையும் இணைந்து தயாரிக்க உள்ளது.
படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.