வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
சமீபகாலமாக தனது நடிப்பு எல்லையை,. தமிழ், தெலுங்கு என விரிவுபடுத்தி வரும் துல்கர் சல்மான், ஹிந்தியிலும் 'கர்வான்' என்கிற படம் மூலம் காலடி எடுத்து வைத்துவிட்டார். இந்தப்படம் இன்னும் ரிலீஸாகாத நிலையில் அடுத்ததாக, பிரபல பாலிவுட் இயக்குனரான அனுராக் காஷ்யப்பின் டைரக்சனில் 'மேன்மர்ஷியான்' என்கிற படத்தில் துல்கர் நடிக்க இருக்கிறார் என்கிற என்கிற தகவல் கடந்த மாதம் வெளியானது.
இந்தநிலையில் இந்தப்படத்தில் துல்கருக்கு பதிலாக தற்போது அபிஷேக் பச்சன் நடிக்கிறார் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. துல்கர் இதிலிருந்து விலகியதற்கான காரணம் தெரியவில்லை. அதேசமயம் துல்கருக்கு முன்னதாக இந்த கேரக்டரில் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டவர் அபிஷேக் தான் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்தப்படத்தின் கதையை இயக்குனர் ஆனந்த் எல்.ராய் எழுதியுள்ளார். முக்கோண காதல் கதையாக உருவாகும் இந்தப்படத்தில் டாப்ஸி கதாநாயகியாக நடிக்கிறார்.