‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
உலக அழகி பட்டம் வென்ற மனுஷி சில்லர், கரன் ஜோகர் இயக்கும் ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 என்ற படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கரன் ஜோகரிடம் இது பற்றி கேட்டதற்கு, இந்த தகவலை அவர் மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், இந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை. மனுஷியின் சாதனைகள் குறித்து நாங்கள் மிகவம் பெருமை கொள்கிறோம். நான் நடத்திய அழகு போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் வெற்றி பெற்றுள்ளார். இதற்கு முன் அப்போது தான் அவரை சந்தித்தேன். அவரது ஆற்றலை பார்த்து வியந்துள்ளேன். அதற்கு பிறகு அவரை சந்திக்கவில்லை.
இந்தியா சார்பில் அழகி போட்டியில் அவர் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற பிறகு இதுவரை அவரை நான் சந்திக்கவோ, அவருடன் எதையும் ஆலோசிக்கவோ இல்லை என்றார்.