தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வக்கந்தம் வம்சி இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நாயகனாக நடித்து வரும் படம், "நா பேரு சூர்யா நான இல்லு இந்தியா". அனு இம்மானுவேல் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் அர்ஜூன், சரத்குமார் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் அல்லு அர்ஜூன் மற்றும் அர்ஜூனின் குரலும் இடம்பெற்றிருக்கிறது. அதோடு மிகவும் கோபமான ராணுவ வீரராக அல்லு அர்ஜூன் நடித்திருக்கிறார்.
இதுவரை, நா பேரு சூர்யா படத்தில், அர்ஜூன் நெகடீவ் ரோலில் நடித்திருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது அவர் அல்லு அர்ஜூனின் தந்தையாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.