இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
துவ்வாத ஜகன்னாதம் படத்தை அடுத்து அல்லு அர்ஜூன் நடித்து வரும் படம் நா பேரு சூர்யா. வக்கந்தம் வம்சி இயக்கும் இந்த படத்தில் அனு இம்மானுவேல், அர்ஜூன், சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். வருகிற ஏப்ரல் 27-ந்தேதி வெளியாகும் இந்த படம் அதிரடியான அரசியல் கதையில் உருவாகியிருக்கிறது.
மேலும், இந்த படத்தில் அர்ஜூன், சரத்குமார் ஆகிய இருவரும் அதிரடியான அரசியல்வாதிகளாக நடித்திருப்பதாகவும், அவர்களுக்கு இந்த படத்தில் நெகடீவ் வேடங்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் அதிர்ச்சி தரும் டீசர் தற்போது ரெடியாகியிருக்கிறது. அந்த டீசரை நாளை புத்தாண்டு தினத்தன்று வெளியிடுகிறார்கள்.