ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
புக்ரே படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான புக்ரே ரிட்டர்ன்ஸ் படம் கடந்தவாரம் வெளியானது. புல்கிட் சாம்ராட், ரிச்சா சத்தா, மனோஜ் சிங், அலி பாசல் உள்ளிட்ட ஏற்கனவே நடித்தவர்களே நடித்திருந்தனர். மிர்க்தீப் சிங் இயக்கி இருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன் காரணமாக வசூலும் சிறப்பாக இருந்துள்ளது.
கடந்த ஒருவாரத்தில் மட்டும் வெள்ளி முதல் வியாழன் வரை, ரூ.8.10 கோடி, ரூ.11.30 கோடி, ரூ.12.80 கோடி, ரூ.5.10 கோடி, ரூ.5.05 கோடி, ரூ.4.30 கோடி, ரூ.3.65 கோடி... என மொத்தமாக ரூ.50.30 கோடி வசூலித்திருக்கிறது. படத்தின் பட்ஜெட்டை விட ரூ.20 கோடி அதிகம் வசூலித்திருப்பது தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.