துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
கமல் நடித்த பாபநாசம் படத்தில் ஆஷா சரத்தின் கணவராக வருபவர் ஆனந்த் மகாதேவன். இவர் ஒரு இயக்குநரும் கூட. ஹிந்தியில் இவரது இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் அக்சார் 2. ஜரீன் கான், கவுதம் ரோட், அபினவ் சுக்லா முதன்மை ரோலில் நடித்திருந்தனர். இப்படம் கடந்த வெள்ளியன்று வெளியானது சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்துடன் அதிகளவு கவர்ச்சியையும் வெளிப்படுத்திய இப்படம், ரசிகர்களை ஈர்க்கவில்லை. இதனால் படத்தின் வசூல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வித்யாபாலனின் தும்ஹாரி சுலு படம் சிறப்பான வரவேற்பை பெறுவதால் இப்படம் தோல்வி அடையும் நிலையில் உள்ளது. மூன்று நாட்களில் ரூ.7 - 8 கோடி வசூலிக்கும் என்று எதிர்பார்த்த இப்படம் வெறும் ரூ.2.75 கோடி தான் வசூலித்திருக்கிறது. இதனால் படம் நிச்சயம் தோல்வி படம் என விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள்.