பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள படம் என்ற பெருமையோடு கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான படம் நியூட்டன். நக்சல் பாதித்த பகுதிகளில் தேர்தலை எப்படி வெற்றிகரமாக அரசு அதிகாரியான ராஜ்குமார் நடத்தி முடிக்கிறார் என்பதை அரசியல் நையாண்டி கலந்து சொன்ன படம். இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரூ.15 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் 430 தியேட்டர்களில் வெளியானது. வெளியான மூன்று நாட்களில் ரூ.96 லட்சம், ரூ.2.52 கோடி, ரூ.3.42 கோடி என... ரூ.6.90 கோடி வசூலித்திருக்கிறது. சஞ்சய் தத்தின் பூமி, ஸ்ரத்தாவின் ஹசீனா படங்களை விட இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் நிச்சயம் நியூட்டன் வசூலில் சிறப்பாக இருக்கும் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.