ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
ரேஸ் படங்களின் வரிசையில் மூன்றாம் பாகமாக ரேஸ் 3 உருவாக உள்ளது. முந்தைய பாகங்களில் நடித்த சைப் அலிகானுக்கு பதிலாக சல்மான்கான் நடிக்க உள்ளார். ரெமோ டிஷோசா இயக்க உள்ளார். முந்தைய பாகங்களை விட அதிரடி ஆக்ஷ்ன் படமாக இப்படம் உருவாக உள்ளது.
ரேஸ் 3 படத்திற்கு தற்போது ஹீரோயின் தேடுதல் நடந்து வருகிறது. ஜாக்குலின் பெர்ணான்டஸ் இப்படத்தில் நடிக்கலாம் என கூறப்பட்டு வந்த நிலையில், இப்போது டெய்சி ஷாவை நடிக்க வைக்கலாம் என படக்குழு எண்ணியுள்ளது. இந்த முடிவை எடுக்க காரணம் சல்மான் தான், டெய்சியை சிபாரிசு செய்தாராம். இதுதொடர்பாக டெய்சியிடம் பேசி வருகிறார்கள். அவர் சம்மதம் சொல்லும் பட்சத்தில் விரைவில் ரேஸ் 3 படத்திற்கான அடுத்தக்கட்ட வேலைகள் தொடங்கும் என தெரிகிறது. அக்டோபர் மாதம் முதல் படப்பிடிப்பை தொடங்க எண்ணியுள்ளனர்.