தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சில மாதங்களுக்கு முன்னர் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றதோடு, பாராட்டையும் பெற்ற படம் "மாம்". படத்திற்கு கிடைத்த வரவேற்பு மற்றும் ஸ்ரீதேவியின் நடிப்பை பார்த்து, தற்போது வெளிநாடுகளில் மாம் படத்தை ரிலீஸ் செய்ய வேலைகள் நடந்து வருகின்றன.
முதற்கட்டமாக ரஷ்யாவில் 21 தியேட்டர்களிலும், போலாந்தில் 9 தியேட்டர்களிலும், செக் குடியரசில் 3 தியேட்டர்களிலும் இப்படம் திரையிடப்பட இருக்கிறது. அக்டோபர் மாதம் வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்திருக்கிறார்.
"மாம் படத்திற்கு உலகளவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாகத்தான் ரஷ்யா, போலாந்து, செக் குடியரசு நாடுகளில் ரிலீஸாக உள்ளது. இன்னும் பிற நாடுகளிலும் ரிலீஸ் செய்ய உள்ளோம்" என்று போனி கபூர் தெரிவித்திருக்கிறார்.