பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
ரேஸ் படங்களின் வரிசையில் ஏற்கனவே இரண்டு படங்கள் வெளியாகியுள்ளன. இந்த இரண்டிலும் சைப் அலிகான் கான் தான் ஹீரோவாக நடித்திருந்தார். இப்போது ரேஸ் 3 படம் உருவாக உள்ளது. இதில், சல்மான் கான் நடிக்க உள்ளார். தற்போது டைகர் ஜிந்தா ஹே என்ற படத்தில் நடித்து வரும் சல்மான், அதற்கு அடுத்தப்படியாக ரெமோ டிசோசாவின் இயக்கத்தில் கோ டாடி என்ற படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது அதே ரெமோ டிசோசாவின் இயக்கத்தில் ரேஸ் 3 படத்தில் நடிக்க உள்ளார். இப்படம் 3டியில் உருவாக உள்ளது. கார் ரேஸை மையமாக வைத்து ஒரு ஆக்ஷ்ன் படத்தை கொடுக்க உள்ளனர். சல்மான் நெகட்டிவ் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.