மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
அர்ஜூன் கபூரும், பரிணிதி சோப்ராவும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியான நிலையில் இப்போது அவர்கள் இணைந்து நடிப்பது உறுதியாகியிருக்கிறது. விபுல் அம்ருதுலால் ஷா இயக்கும் இப்படத்திற்கு நமஸ்தே கனடா என்று பெயரிட்டுள்ளார்கள். இப்படம் அக்ஷ்ய் குமார் நடிப்பில் வெளியான நமஸ்தே லண்டன் படத்தின் தொடர்ச்சி என்று ஒரு தகவல் வெளியானது. ஆனால் இதை இயக்குநர் விபுல் மறுத்துள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் விபுல் கூறியதாவது... "நமஸ்தே கனடா, நமஸ்தே லண்டன் படத்தின் தொடர்ச்சி கிடையாது. இப்படியொரு படத்தலைப்பை வைக்க உதவிய அக்ஷ்ய் குமாருக்கு நன்றி. என்னுடைய இந்த பயணத்தில் அர்ஜூன், பரிணிதி இணைந்துள்ளார்கள். இப்படம் சிறப்பாக வரும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.