ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
இம்தியாஸ் அலி இயக்கத்தில் ஷாரூக்கான், அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜப் ஹேரி மெட் சஜல். இதில் ஷாரூக்கான் சுற்றுலா வழிகாட்டியாகவும், அனுஷ்கா சுற்றலாவை ரசிக்க வந்தவருமான ரோலில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகிவிட்ட நிலையில் படத்தை தணிக்கை குழுவினருக்கு அனுப்பியுள்ளனர். படத்தை பார்த்த அதிகாரிகள் யு/ஏ சான்று அளித்துள்ளனர்.
இதுகுறித்து இயக்குநர் இம்தியாஸ் அலி கூறுகையில், எங்கள் படத்திற்கு யு/ஏ சான்று கிடைத்திருக்கிறது. படத்திற்கு விஷூவல் கட் என்று எதுவும் இல்லை. சில ஆடியோக்களை மட்டும் கட் செய்துள்ளனர். சென்சார் போர்டின் முடிவை மகிழ்ச்சியாக ஏற்கிறோம் என்கிறார்.
ஜப் ஹேரி மெட் சஜல் படம் வருகிற, ஆகஸ்ட் 4-ம் தேதி ரிலீஸாக உள்ளது.