வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
இம்தியாஸ் அலி இயக்கத்தில் ஷாரூக்கான், அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜப் ஹேரி மெட் செஜல். இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் பிஸியாக உள்ளர் அனுஷ்கா உள்ளிட்ட படக்குழுவினர். சமீபத்தில் இப்படம் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுஷ்காவிடம், அடுத்தப்படியாக ஆனந்த் எல் ராய் நடிப்பில் உருவாகும் படம் குறித்து கேட்டபோது, அவர் கூறியதாவது....
"எனது பரி படத்தை முடித்ததும் ஆனந்த் எல்.ராய் - ஷாரூக்கான் இணையும் படத்தில் நடிக்கிறேன். இந்தப்படத்தில் என்னுடன் கத்ரீனா கைப்பும் இன்னொரு நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் நடிப்பது மகிழ்ச்சி தான். ஆனால் கத்ரீனாவிற்கும், எனக்கும் ஒரு காட்சி கூட இணைந்து நடிப்பது போன்று கிடையாது. ஆனால் ஒரு சக நடிகையாக கத்ரீனாவின் நடிப்பு மற்றும் திறமையை நான் மதிக்கிறேன். ஷாரூக்கான் உடன் நான் இணைந்து நடிக்கும் நான்காவது படம். வேறு எந்த ஒரு நடிகருடன் இந்தளவு நடித்து கிடையாது. ஒரு இயக்குநராக சிறந்து விளங்குபவர் ஆனந்த் எல்.ராய். எப்போதும் நடிப்பில் ஊக்கம் அளித்து கொண்டே இருப்பார்" என்று கூறியுள்ளார்.