அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
டைரக்டர் அடுல் மஞ்சிரேக்கர் இயக்கும் படம் பான்னி கான். இப்படத்தின் வேலைகள் ஆகஸ்ட் மாதம் துவங்க உள்ளது. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தில் நடிகர் அனில் கபூருக்கு ஜோடியாக அவர் நடிக்க உள்ளதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன் தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது வெளியாகி உள்ள தகவலின்படி, இப்படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக அனில் கபூர் நடிக்கவில்லையாம்.
அனில் கபூருக்கு பதில் இளம் ஹீரோ ஒருவரை இப்படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். ஐஸ்வர்யா ராயுடன் காதல் காட்சிகளில் நடிக்க அந்த இளம் ஹீரோ தான் பொருத்தமாக இருப்பார் என படக்குழு நினைத்திருப்பது தான் இதற்கு காரணமாம்.
இப்படத்தில் ஐஸ்வர்யாவுக்கு ஜோடியாக விக்கி கவுசல் அல்லது ராஜ்கமார் ராயை நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனராம். இதற்கு முன் ஏ தில் ஹை முஸ்கில் படத்தில் இளம் ஹீரோவான ரன்பீருடன் ஐஸ்வர்யா ராய் ஜோடி சேர்ந்து நடித்தது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.