‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பாலிவுட்டில், கான் படங்கள் ரிலீஸாகிறது என்றால் வெளியிடப்பட்ட முதல் மூன்று நாட்களுக்குள் ரூ.100 கோடி வசூலை எட்டி விடும். ஒரு சில படங்கள் தான் இதில் விதிவிலக்கு. அப்படி சல்மானின் சமீபத்திய படங்கள் ரூ.100 கோடி வசூலை மூன்று நாட்களுக்குள் எட்டிய நிலையில் இப்போது அவரது நடிப்பில் வெளியாகியுள்ள டியூப்லைட் படம் அந்த சாதனையை செய்ய தவறிவிட்டது. படம் வெளியாகி நான்கு நாட்களாகிவிட்டது. டியூப்லைட் படம் ரூ.83.86 கோடி தான் வசூலித்திருக்கிறது. இத்தனைக்கும் ரம்ஜான் பண்டிகை வந்ததால் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வேறு இருந்தது. ஆனால், படத்திற்கு எழுந்த விமர்சனங்கள் மற்றும் சல்மானின் நடிப்பு ரசிகர்களை கவராததால் இப்படம் இச்சாதனையை எட்ட தவறிவிட்டது. இருந்தாலும் இன்னும் ஒருவாரத்திற்குள் ரூ.100 கோடி வசூலை எட்டிப்பிடிக்கும் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.