தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து |
நடிகர் சைப் அலி கான் நடித்து வரும் புதிய படம், காலகாண்டி. இப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் 8 ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
காலகாண்டி படம் மும்பையில் உள்ள செட் ஒன்றில் படமாக்கப்பட்டுள்ளது. த்ரில்லிங் கலந்த காமெடி படமாக உருவாகி உள்ள இப்படம், மாறுபட்ட சூழல்களில், நகர்புறத்தில் வாழும் 6 கேரக்டர்களை பற்றியது. இப்படத்தை அக்ஷத் வர்மா இயக்குகிறார், சினிஸ்டான் பிலிம் கம்பெனி தயாரிக்கிறது.
இப்படத்தில் சைப் அலி கான், தீபக் தோபிரியால், விஜய் ராஜ், குணால் ராய் கபூர், சோபிதா துலிபலா, அக்ஷை ஓபராய், இஷா தல்வார், ஷெனாஸ் டிரசரி, ஷிவம் படேல், அமிரா டஸ்டர், நெயில் பூபாலன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.