பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
டைரக்டர் ரவி உதய்வார் இயக்கத்தில், போனி கபூர் தயாரித்துள்ள படம், மாம். இப்படம் வரும் ஜூலை 7 ம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தில் ஸ்ரீதேவி தவிர, நடிகர் அக்ஷை கண்ணாவும் நடித்துள்ளார். இப்படத்தில் அக்ஷை கண்ணா மிக வலிமையாக ஒரு கேரக்டரில், சிறப்பாக நடித்துள்ளார்.
சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய அக்ஷை கண்ணா, மாம் படம் பற்றி பேசினார். அப்போது அவர், மாம் படம் எனது சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல். அதற்கு காரணம் ஸ்ரீதேவி மற்றும் நவாசுதீன் சித்திக்குடன் நடித்தது தான். இன்று மிகச்சிறந்த நடிகர்கள் நமக்கு கிடைத்துள்ளனர். அவர்களின் நடிப்பு, கதையில் பதிக்கப்பட்ட மாணிக்கம். இது போன்ற சிறந்த நடிகர்களுடன், சிறப்பான கதையில் நடித்தது மிகப் பெரிய கவுரவம் என்றார்.