பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் |
டைரக்டர் மதுர் பந்தர்கர் இயக்கி உள்ள படம் இந்து சர்கார். குர்தி குல்ஹரி, நீல் நிதின் முகேஷ் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் இந்த ஆண்டு ஜூலை 21 ம் தேதி ரிலீசாக உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்து சர்கார் படம் ஜூலை 28 ம் தேதி ரிலீசாக உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம், 1975 ம் ஆண்டு இந்தியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட சமயத்தில் நடந்த கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியன், ஒரு சாமானிய மனிதன் விடுதலை உணர்வை எப்படி வெளிப்படுத்துகிறான், அந்த சமயத்தில் தனிமனித உரிமை எப்படி இருந்தது என்பது பற்றி கூறுவதே இப்படத்தின் கதை.