மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சல்மான் கான் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் டியூப்லைட். கபீர்கான் இயக்கத்தில் சல்மான் உடன் சோகைல் கான், ஓம் புரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். எல்லையில் போருக்கு போன தன் சகோதரருக்கு என்ன நேர்ந்தது என்பதை ஒரு சகோதரரின் பார்வையில் சொல்ல போகிறது இந்த டியூப்லைட் படம். இப்படத்தின் படப்பிடிப்பின்போது சல்மான்கான் நிறைய இடங்களில் உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சல்மான் கூறியிருப்பதாவது... "டியூப்லைட் படமே ஒரு உணர்வுப்பூர்வமான படம் தான். இப்படத்தின் படப்பிடிப்பின்போது நிறைய காட்சிகளில் நான் உணர்ச்சிவசப்பட்டேன். குறிப்பாக படத்தில் என்னை விட்டு என் சகோதரர் பிரிந்து சென்றபோது நிஜமாகவே உணர்ச்சிவசப்பட்டு அழுதேன். அதேப்போன்று டப்பிங் பேசும்போது நிறைய இடங்களில் உணர்ச்சிவசப்பட்டேன்" என்றார்.
டியூப்லைட் படம் வருகிற ஜூன் 23-ம் தேதி ரிலீஸாக உள்ளது.