ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர், தன் வாழ்க்கை படத்தின் மூலமே சினிமாவில் அறிமுகமாகி உள்ளார். இதில் அவரது ரோலில் சச்சினே நடித்திருக்கிறார். "சச்சின் ஏ பில்லியன் டிரீம்ஸ்" என்ற பெயரில் உருவாகியுள்ள இப்படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கியிருக்கிறார். நாளை உலகம் முழுக்க இப்படம் ரிலீஸாக உள்ளது. தனது முதல்படத்தை ஊர் ஊராக சென்று புரொமோஷன் செய்திருக்கிறார் சச்சின்.
இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் சச்சின் படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் முன்மாதிரியாக இருப்பவர் சச்சின். அவரது படத்தை ரசிகர்கள் அனைவரும் தியேட்டரில் சென்று பார்க்கும் வகையில் படத்திற்கு வரிவிலக்கு அளித்திருப்பதாக ஒடிசா நிதியமைச்சர் கூறியிருக்கிறார்.