ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் கமல்ஹாசனின் வாரிசான நடிகை ஸ்ருதிஹாசன், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர், தற்போது ஹிந்தியில் பேகன் ஹோகி தெறி என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஸ்ருதி ஜோடியாக ராஜ்குமார் ராவ் நடித்திருக்கிறார். அஜய் இயக்கியுள்ளார். டோனி டிசோசா, அமுல் விகாஸ் மற்றும் நிதின் ஆகியோர் தயாரிக்கிறார்கள். காமெடி படமாக உருவாகி உள்ள பேகன் ஹோகி தெறி படம் ஜூன் 2-ம் தேதி ரிலீஸாக இருந்தது. ஆனால் இப்போது ரிலீஸ் தேதியை ஒருவாரம் தள்ளி வைத்துள்ளனர்.
இதுகுறித்து தயாரிப்பாளர் அமுல் விகாஸ் மோகன் கூறுகையில், "பேகன் ஹோகி தெறி படம் தனியாக தெரியும். ஜூன் 2-ம் தேதி ஏகப்பட்ட படங்கள் ரிலீஸாவதால், எங்களது படத்தை ஒருவாரம் தள்ளி ஜூன் 9ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளோம். ஆகையால் படத்தை மேலும் ஒருவாரம் புரொமோஷன் செய்ய முடிவெடுத்துள்ளோம்" என்கிறார்.