ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிறைவாசத்திற்கு பின்னர் மீண்டும் சினிமாவில் பிஸியாகியிருக்கும் சஞ்சய் தத், பூமி படத்தை முடித்துவிட்டு அடுத்தடுத்து படங்களில் நடிக்க தயாராகி வருகிறார். இதில் திக்மான்சு துலியா இயக்கத்தில் சாகிப் பிவி அவுர் கேங்ஸ்டர் 3 படத்தில் நடிக்க உள்ளார். கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இப்படத்தில் சஞ்சய் தத், ஒரு கேங்ஸ்டராகவே நடிக்கிறார். சஞ்சய் தத்துடன் ஜிம்மி ஷெர்கில், மகி கில் ஆகியோரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்திற்காக சஞ்சய் தத், தனது தோற்றத்தில் குறிப்பாக ஹேர்ஸ்டைலை மாற்றியிருக்கிறார். இன்றைய இளைஞர்கள் வைக்கும் விதவிதமான ஹேர்ஸ்டைல் போன்று மிகவும் யூத்புல்லாக தனது ஹேர்ஸ்டைலை மாற்றியிருப்பதோடு, தனது புதிய ஹேர்ஸ்டைல் லுக்கை இன்ஸ்ட்ராகிராமிலும் பதிவிட்டிருக்கிறார் சஞ்சய். வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.