டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாகுபலி படத்தில் இரண்டு பாகங்களிலும் நடித்த பிறகு இந்திய அளவில் பேசப்படும் நடிகராகி விட்டார் பிரபாஸ். அதன்காரணமாக பாகுபலி-2வைத் தொடர்ந்து அவர் நடிக்கும் சாஹோ படமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் ரூ. 150 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. ரன் ராஜா ரன் என்ற தெலுங்கு படத்தை இயக்கிய சுஜீத், சாஹோ படத்தை இயக்குகிறார்.
மேலும், பிரபாஸ் தற்போது மிகப்பெரிய நடிகராகி விட்டதால் அவருடன் இந்த படத்தில் ஜோடி சேருவதற்கு பல தென்னிந்திய நடிகைகள் முயற்சித்து வந்தனர். குறிப்பாக, தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளுக்கும் பரிட்சயமான தமன்னா ரொம்பவே முயற்சி எடுத்து வந்தார். ஆனால், அவரது முயற்சி கைகொடுக்கவில்லை.
இந்த நிலையில, தற்போது சாஹோ படத்தில் நாயகியாக நடிக்க யாரை நடிக்க வைக்கலாம் என்று தீவிரமாக பரிசீலித்து வந்த டைரக்டர் சுஜீத் தற்போது இந்தி நடிகை கத்ரினா கைப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் அவர் நடிப்பது உறுதியாகி விடும் என்றும் தெலுங்கு மீடியாக்களில் செய்தி வெளியாகியுள்ளது.