'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபலமாக திகழ்ந்தவர்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் பாலிவுட்டில் அதிகளவில் வெளியாகி வருகின்றன. அந்தவகையில் ஏற்கனவே தோனி, அசார், சச்சின், மாவீரர் போகத்... உள்ளிட்ட பலரது வாழ்க்கை வரலாற்று படங்களை தொடர்ந்து, அடுத்தப்படியாக விண்வெளிக்கு சென்று சாதனை படைத்த வீரமங்கை மறைந்த கல்பனா சாவ்லாவின் வாழ்க்கை சினிமாவாக உருவாக இருக்கிறது. இதில் பிரியங்கா சோப்ரா நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் இப்போது அவர் நடிப்பது உறுதியாகியிருக்கிறது.
இதுகுறித்து இப்படத்தை இயக்க உள்ள பிரியா மிஷ்ரா கூறுகையில், கல்பனா சாவ்லாவாக பிரியங்கா சோப்ரா நடிக்கிறார், விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளோம் என்று கூறியுள்ளார்.
தற்போது பிரியங்கா சோப்ரா, தான் நடித்துள்ள முதல் ஹாலிவுட் படமான ‛பேவாட்ச்' படத்தின் ரிலீஸ் நாளை எண்ணி ஆவலோடு காத்திருக்கிறார். இப்படம் வருகிற மே 25-ம் தேதி ரிலீஸாகிறது.