ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
2015-ம் பெங்காலியில் வெளியான படம் ராஜ்காஹினி, இப்படத்தை பாலிவுட்டில் ‛பேகம் ஜான்' என்ற பெயரில் ரீ-மேக் செய்துள்ளனர். வித்யாபாலன் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். அவருடன் சேர்ந்து பாலியல் தொழில் செய்யும் 11 பெண்களின் வாழ்க்கையை சுற்றி இப்படத்தின் கதை பின்னப்பட்டுள்ளது. ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது ரிலீஸ்க்கான பணிகள் மும்முரமாய் நடந்து வருகிறது. பொதுவாக பாலிவுட் படங்கள் பாகிஸ்தானிலும் திரையிடப்பட்டு அங்கும் நல்ல வரவேற்பை பெறும். ஆனால் சமீபகாலமாக இந்தியா - பாகிஸ்தான் பேகம் ஜான் படம் பாகிஸ்தானில் ரிலீஸாகவில்லை.
இதுப்பற்றி தயாரிப்பாளர் விஸ்சேஷ் பட் கூறுகையில், பாகிஸ்தானில் படத்தை ரிலீஸ் செய்ய பேசி வருகிறோம். ஆனால் அரசியல் சூழல் மற்றும் இன்னும் பிற காரணங்களால் இன்னும் உறுதியாகவில்லை. எங்களால் முடிந்தளவுக்கு எவ்வளவு தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய முடியுமோ, அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். ஆனால் பாகிஸ்தானில் ரிலீஸ் செய்வது மட்டும் கொஞ்சம் சிக்கலாக உள்ளது'' என்கிறார்.
‛பேகம் ஜான்' படம் உலகம் முழுக்க ஏப்., 14-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.