விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
பாலிவுட்டின் மாஜி ஹீரோயின் ரவீணா டாண்டன். தமிழில், கமல் உடன் ‛ஆளவந்தான்' படத்தில் நடித்தார். தேர்ந்தெடுத்த படங்களில் நடிப்பதையே வழக்கமாக கொண்டுள்ள ரவீணா, தற்போது ‛மாத்தர் - தி மதர்' என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் ஒரு வேலைக்கு போகும் தாயாக ரவீணா நடித்துள்ளார். இப்படம் நீண்ட போராட்டத்திற்கு பிறகு வருகிற ஏப்ரல் 21-ம் தேதி ரிலீஸாக உள்ளது. அன்றைய தினம் தான் சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ள ‛நூர்' படமும் ரிலீஸாக உள்ளது. நூர் படத்தில் சோனாக்ஷி, பத்திரிகையாளராக நடித்திருக்கிறார். இந்தப்படமும் ஏப்ரல் 21-ம் தேதி தான் ரிலீஸாக உள்ளது. இதனால் இரண்டு படங்களுக்கும் இடையே பாக்ஸ் ஆபிஸில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், எந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் அசத்த போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.