மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பிரபல கன்னட ஹீரோவான சுதீப், ‛நான் ஈ' படம் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களுக்கு பிரபலமானார். தற்போது மூன்று மொழிகளிலும் பிரபலமான நடிகராக திகழும் சுதீப், பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் பாலிவுட்டில் கால்பதிக்க உள்ளார். அதுவும் சல்மானுக்கு வில்லனாக களமிறங்க இருக்கிறார்.
சல்மான் நடிப்பில் ‛டைகர் ஜிந்தா ஹே' படம் உருவாக உள்ளது. ஏக்தா டைகர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக உள்ள இப்படத்தில் சல்மானுடன் மோதும் வில்லனாக, ஐஎஸ்ஐ., ஏஜென்ட்டாக நடிக்க உள்ளார் சுதீப். முதல்பாகத்தில் நடித்த கத்ரீனாவே சல்மான் ஜோடியாக இப்படத்தில் தொடருகிறார், அலி அப்பாஸ் ஜாபர் இயக்குகிறார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. இந்தாண்டு இறுதியில் டிச., 22-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.