இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
காதலர்களாக இருந்த ரன்பீர் கபூரும், கத்ரீனா கைப்பும் இணைந்து நடித்த படம் ‛ஜகா ஜசூஸ்'. இப்படம் முக்கால்வாசிக்கு மேல் முடிந்த நிலையில் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தனர். ஆனாலும் தங்களது படத்தை முடித்துவிட்டனர். இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. தற்போது படத்திற்கான இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் மும்முரமாய் நடந்து வருகிறது. சமீபத்தில் கத்ரீனா அளித்த பேட்டி ஒன்றில் ஜகா ஜசூஸ் படம் பேசினார்.
அதில், ‛‛ஜகா ஜசூஸ் படம் அனைவரும் பார்த்து ரசிக்கக்கூடிய தகுதியான படம். குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் வந்து பார்க்கும் படமாக இப்படம் இருக்கும். இது ஒரு அட்வென்சர் நிறைந்த படம். இதுவரை நான் நடித்திராத ஒரு வித்தியாசமான படம்'' என்று கூறியுள்ளார்.
ஜகா ஜசூஸ் படம் வருகிற ஏப்ரல் 7-ம் தேதி ரிலீஸாகிறது.