மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால் அதன் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஜாலி எல்எல்பி படத்தின் வெற்றியால், ஜாலி எல்எல்பி-2 படம் சிலவாரங்களுக்கு முன்னர் வெளியானது. இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸிலும் இணைந்தது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் ஜாலி எல்எல்பி-2 படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய படக்குழுவிடம், ஜாலி எல்எல்பி-3 படம் உருவாக வாய்ப்பு இருக்கிறதா...? என்று கேள்வி கேட்டபோது அதற்கு பதிலளித்த பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவின் தலைவர் விஜய் சிங் கூறுகையில், நிச்சயம் ஜாலி எல்எல்பி-3 படமும் உருவாகும் என்று உறுதிப்பட தெரிவித்தார். ஆனால் இதில் யார் யார் நடிப்பார்கள் போன்ற விவரத்தையும் எல்லாம் அவர் தெரிவிக்கவில்லை.