சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
சீனிகம், பா ஆகிய ஹிந்திப் படங்களை இயக்கிய பால்கி தனுஷ், அமிதாப்பை வைத்து இயக்கிய படம் 'ஷமிதாப்'. இந்தப் படத்தின் மூலம்தான் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார். ஷமிதாப் படத்தில் நடித்தபோது அமிதாப்பச்சன், தனுஷ் ஆகியோரின் பாராட்டைப்பெற்ற அக்ஷரா ஹாசன், தன்னுடைய நடிப்பினால் இயக்குநர் பால்கியின் கவனத்தையும் கவர்ந்தார்.
ஷமிதாப் படத்தை தொடர்ந்து தற்போது அஜித் நடிக்கும் விவேகம் படத்தில் நடித்து வருகிறார் அக்ஷரா ஹாசன். இதற்கிடையில் 'லாலி கி ஷாதி மெய்ன் லட்டு தீவானா' என்ற ஹிந்தி படத்தில் நடித்துள்ளார். 'சர்ஃபுதியா சோகரே' என்ற ஹிந்தி படத்தை இயக்கிய மனீஷ் ஹரி சங்கர் இயக்கியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. அக்ஷரா ஹாசன் உடன் விவன் ஷா, சௌரப் சுக்லா, தர்ஷன் ஜாரிவாலா, சஞ்சய் மிஸ்ரா முதலானோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஒளிப்பதிவை சென்னையை சேர்ந்த ரவி யாதவ் கவனித்துள்ளார். இவர் குற்றப்பத்திரிகை படத்தை தயாரித்தவர்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் ஒரு போஸ்டரில் அக்ஷ்ரா, திருமண கோலத்தில் அழகாக தோன்றுகிறார். மற்றொரு போஸ்டரில் விவன் ஷா அப்பாவியாக இருப்பது போன்று போஸ்டர் வெளியாகியிருக்கிறது.
அக்ஷரா ஹாசன் நடிப்பில் இரண்டாவது ஹிந்தி படமாக வெளியாகவிருக்கும் இந்த படத்தை தொடர்ந்து அவரது நடிப்பில் 'விவேகம்' வெளியாகவிருக்கிறது. தவிர, கமல்ஹாசன் இயக்கி நடித்து வரும் 'சபாஷ் நாயுடு' படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார் அக்ஷரா ஹாசன்.